‘கண்’ணான குளறுபடிகள்..!

செய்தி:

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட முகாமில் ‘ஆயுஷ் மான் பாரத்’ திட்டத்தின் கீழ் பலருக்கு கண்புரை ஆப்ரேஷன் செய்யப்பட்டது!

இதில்  தவறாக மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சை காரணமாக 9 பேருக்கு கண் அகற்றப்பட்ட நிலையில், மேலும் 9 பேர் பார்வை இழந்ததால், மருத்துவமனையின் கண்துறைக்கு சீல் வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் தீபக் மீனா.

கோவிந்த் கமெண்ட்:

‘ஆயுஷ் மான் பாரத்’ திட்டத்தில் பார்வைக்கே தனி ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் போலிருக்கிறதே!

கண்ணில் பார்வை உள்ளவர்கள் சற்றே உற்று கவனிக்கவும்!

 
 
You might also like