பெயருடன் சாதி: நீக்கச் சொன்ன பெரியாரும், நீக்கிய எம்ஜிஆரும்!

‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’
 
– இப்படித்தான் பெரியாரை முதலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குடியரசு’ இதழில் கூட, ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் இருந்தது. அப்போது சாதிய அடையாளங்களைப் பெயருடன் சேர்த்துக் கொள்வது இயல்பாக இருந்தது.
 
1929-ம் ஆண்டில் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியபோது நடந்த மாநாட்டில் “பெயருக்குப் பின்னாலிருக்கும் சாதியப்படங்களை நீக்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.
 
அதற்கு முன்பு 1927-ல் இருந்தே தன்னுடைய பெயரில் இருந்த சாதிய அடையாளத்தை எடுத்துவிட்டு ‘ஈ.வெ.ராமசாமி’ என்றே குறிப்பிட்டு வந்தார்.
 
பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட நேரம். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அதை அரசு விழாவாகக் கொண்டாடினார்.
 
தமிழகத்தின் சாலைகளில், தெருக்களில் சாதிப்பெயர்கள் இருந்ததை நீக்கும் விதத்தில், பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
 
“தமிழ்நாட்டில் சாலை, தெருப்பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும்”.
 
அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நாள் 1978 அக்டோபர் 3 ஆம் தேதி.
 
ஆணை வெளிவந்த பிறகு தமிழகத்திலுள்ள சாலை, தெருக்களில் இருந்த பெயர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்த சாதிய அடையாளங்கள் நீக்கப்பட்டன.
 
You might also like