ஏதோ ஒன்று…!

படித்ததில் ரசித்தது:

ஏதோ ஒன்று
நம்மை
காப்பாற்ற
முயற்சித்துக் கொண்டே
இருக்கிறது.

ஏதோ ஒன்று
நம்மை அழிக்க
முயற்சித்துக் கொண்டே
இருக்கின்றது.

இரண்டு ஏதோக்களும்
ஏதோ ஒரு வெளியில்
சண்டை போட்டுக்
கொண்டே இருக்கின்றன.

நாம் வெறுமனே
இந்தக் கைக்கும்
அந்தக்
கைக்கும்
மாறி மாறி போய்க்

கொண்டிருக்கிறோம்.

இறுதியில் ஏதோ
ஒன்று ஜெயித்து
ஏதோ
ஒன்றின் கையில்
நம்மைக் கொடுத்து விடுகிறது!

– போகன் சங்கர்

 

You might also like