மா.அரங்கநாதன் – அதிகம் அறியப்படாத ஆளுமை!

“சமகால நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் தனித்துவப் படைப்பு மனம் கொண்ட மா.அரங்கநாதன், அதிகம் அறியப்படாத ஆளுமை.

நம் பண்டைய இலக்கியங்கள் மற்றும் சாஸ்திரங்களில் ஞானம்மிக்க இவர், புனைகதை உரைநடையில் தெளிந்த எளிமையைக் கொண்டிருப்பது, இவரது ஞானச் செறிவையும் நவீனத் தன்மையையும் தீர்க்கமாக வெளிப்படுத்துகிறது,” என சி. மோகன் அரங்கநாதனை மதிப்பிடுகிறார்.

2016-ல், ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’ என அவரது எழுத்துகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டன.

90 சிறுகதைகள், ‘பறளியாற்று மாந்தர்’, ‘காளியூட்டு’ என்ற இரு நாவல்கள், ‘பொருளின் பொருள் கவிதை’ உட்பட 46 கட்டுரைகள் என முழுமை பெற்ற தொகுப்பு இது.

மா.அரங்கநாதன் தன் மகன் மகாதேவனின் (இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி) உதவியுடன் ‘முன்றில்’ என்னும் சிற்றிதழை நடத்தினார். 1988 முதல் 1996 வரை 19 இதழ்கள் வெளிவந்தன.

அரங்கநாதனின் மறைவுக்குப் பின் (ஏப்ரல் 16, 2017), மகாதேவன் அவர் நினைவாக, ‘அரங்கநாதன் இலக்கிய விருது’ ஒன்றை ஆண்டுதோறும் வழங்கி வருகிறார்.

தகவல் – ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

You might also like