சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்போது நடந்தது அந்த தமிழிசை மாநாடு. முதலில் பாடியவர் தண்டபாணி தேசிகர். அடுத்து தியாகராஜ பாகவதர்.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தேவாரத்தின் இனிய வரிகளைச் தேசிகர் பாடும்போது கண்ணீர் ததும்பி விட்டது என்று எழுகிறார் தேர்ந்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான கல்கி.
“கம்பீரமான சாரீரம். ஒலிக்கருவி இல்லாமலேயே மண்டபம் முழுவதும் சென்று எதிரொலிக்கும் படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பியது.
சாகித்தியத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர் தான்’’- என்று எழுதியிருப்பார் கல்கி.
அந்த அளவுக்குத் தமிழிசையின் தனித்துவமான முகம் தண்டபாணி தேசிகருடையது.
கர்நாடக இசையில் மிகவும் தேர்ச்சி பெற்ற தண்டபாணி தேசிகர் பாடி நடித்த படம்- ‘பட்டினத்தார்’.
படம் வெளிவந்த ஆண்டு 1936.