சொர்க்கம் மாதிரி இருந்தாலும் சிறை சிறைதான்!

உலகப்புகழ் பெற்ற (!) கொலம்பியா நாட்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார், இன்று (ஜூலை 22) சிறையிலே இருந்து தப்பிய நாளாம்.

எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது? இதைப்பற்றி ஒரு பதிவு எழுதாவிட்டால் எப்படி?

போதைப் பொருள் கடத்தல் மூலமாக பல மில்லியன் டாலர் சொத்து, மாடி, மனை, சொத்து, விமானம், சொந்தமா ஒரு கால்பந்து கிளப். இப்படி அமோகமா வாழ்ந்து வந்த எஸ்கோபார் ஒரு கட்டத்திலே சரணடைய வேண்டி வந்திச்சு. 1991ஆம் வருஷம் அவர் சரணடைஞ்சார்.

எஸ்கோபாருக்கு நீதிமன்றம் அஞ்சு வருஷம் சிறைத்தண்டனை தீட்டிருச்சு.

எஸ்கோபார் ஒரு வேண்டுகோளை முன்வச்சார். ‘நான் இருக்கப் போற சிறையை நானே வடிவமைச்சு (!?) கட்டிக்கிட்டு அங்கே இருக்கிறேன். அப்பதான் என்னோட உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கும்’ அப்படின்னார்.

நீதிபதியும் தலையாட்டினார். அவ்வளவுதான். லா கேதத்ரால் அப்படிங்கிற நவீன சிறைக்கூடம் எஸ்கோபாரோட கைவண்ணத்திலே உருவாயிருச்சு.

அந்த சிறை ஒரு சொர்க்கம் மாதிரி. சிறைக்குள்ளேயே மதுபான விடுதி. குற்றாலம், கூமாப்பட்டி மாதிரி ஒரு மினி அருவி, குளுகுளு நீச்சல்குளம். மசாஜ் பண்ணிக்கணுமா உள்ளேயே மசாஜ் பார்லர்.

அப்புறம் ஜெக்குசி நீராவிக்குளியல் வசதி. போரடிச்சா ஃபுட்பால் ஆட ஒரு கால்பந்து திடல், அப்புறம், டால் அவுஸ் என்கிற பொம்மை வீடு, நைட் கிளப், ஜம்முன்னு உடற்பயிற்சி செய்ய ஒரு ஜிம் இன்னும் பலப்பல வசதிகள்.

லா கேதத்ரால் சிறைக்கு ஒருத்தர் வந்தா அவருக்குத் திரும்பிப் போக மனசே வராது. அவ்ளோ வசதி.

ஆனாலும் என்ன?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், இந்த லா கேதத்ரால் சிறைக்கூடம் கூட ஒரு கட்டத்திலே எஸ்கோபாருக்குப் போரடிச்சு போச்சு. அதனால, ‘வுடு ஜூட்’னு ஒரு நல்ல நாளா பார்த்து 1992ஆம் வருஷம் ஜூலை 22ஆம் தேதி கம்பி நீட்டிட்டார். 

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like