பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த விதம் திடீரென்று பொதுவெளியில் பேசும் பொருளாகிறது.
1967-ல் அதுவரை, தமிழகத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ் வீழ்ந்தபோது காங்கிரசின் வாக்குச் சதவீதம் குறைவான நிலையில் தான் இருந்தது.
அவருடன் நெருங்கிப் பழகிய கவியரசர் கண்ணதாசன் எழுதி, பிரபல பாடகரான டி.ஆர்.மகாலிங்கம் பாடிய இந்தப் பாடல் அந்தக் காலத்தில் ஒலிக்காத காங்கிரஸ் மேடைகளே இருக்காது.
காமராஜரின் வாழ்வைப் பற்றி சொல்ல இதைவிட வேறென்ன வேண்டும்!
கீழே அந்தப் பாடல் வரிகள்:
*****
செந்தமிழர் மைந்தர்களே சிந்தனை செய்க
இந்த தேசம் போகும் போக்கை எண்ணி வேதனை கொள்க
அந்த நாளை இந்த நாளில் கற்பனை செய்க
தமிழண்ணல் காமராஜர் ஆட்சி மீண்டும் விதைக்க
(செந்தமிழர் மைந்தர்களே)
பாச மகன் சிறையில் இருந்தான் பன்னிரெண்டாண்டு
ஒரு பத்து ஆண்டு வாழ வைத்தான் மண்ணிலே ஆண்டு
ஆசையுடன் தமிழருக்கு அறிவினைத் தந்து
ஜாதி அத்தனையும் ஒன்று என்ற உயர்வினைத் தந்து
(செந்தமிழர் மைந்தர்களே)
காலம் பார்க்க அவனுக்கு இல்லை கைகடிகாரம்
நல்ல காலத்தை தான் நிர்ணயிக்கும் அவன் அதிகாரம்
ஆலமரம் போலிருக்கும் அவன் உபகாரம்
அவன் ஆண்ட நாளில் இருந்ததில்லை ஒரு விவகாரம்
(செந்தமிழர் மைந்தர்களே)
பாரதத் தாய் மடியினிலே பட்டினிச் சாவு
தினம் படியளந்த நாடு இன்று பஞ்சத்தின் வீடு
யாரிதனைப் பார்த்ததுண்டு நல் மனத்தோடு
இனி அண்ணல் காமராஜர் தன்னை நாடு அன்போடு
(செந்தமிழர் மைந்தர்களே)
காளிதேவி ஆணையிட்டு உண்மையைச் சொல்வோம்
நம் காமராஜர் துணையினோடு காலத்தை வெல்வோம்
வாழ்வதனை காங்கிரசை மீண்டும் அழைப்போம்
அந்த மன்னவனின் கட்சிக்கே நாம் வாக்கை அளிப்போம்.
(செந்தமிழர் மைந்தர்களே)