தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணி!

1950 – 1980 கால கட்டத்தைத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர், சிவாஜி, எம்எஸ்வி, கே.வி.எம், டி.எம்.எஸ்., கண்ணதாசன், வாலி ஆகியோருடன் பி.சுசீலாவும் இணைந்த கூட்டணி என்று சொல்லலாம்.

அந்த காலகட்டத்தில் வெளியான எந்தப் பாடல்களானாலும், இந்த எட்டு பேரில் ஒருவரின் பங்கு இல்லாவிட்டால் அது ஆச்சர்யம்தான்.

தெலுங்கு தாய் மொழியாக இருந்தாலும், தமிழ் மொழி தாலாட்டி வளர்த்த இசையருவி. பதிலுக்கு தமிழைத் தாலாட்டி எதிர் சேவை செய்த இசை எழிலரசி பி.சுசீலா.

1960-களில் முழுக்க முழுக்கப் பெண் குரல் என்றால் அது பி.சுசீலாதான் என்ற அளவில் உயரத்திற்குக் கொண்டுபோய் வைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு முறை பேசும்போது சொன்னார், “நம்முடைய பி.சுசீலாவை தென்னாட்டு லதா மங்கேஷ்கர் என்று பலரும் சொல்வதை குறிப்பிடாதீர்கள். வேண்டுமானால் லதா மங்கேஷ்கரை வடநாட்டு சுசீலா என சொல்லிக் கொள்ளுங்கள்” என்று ஆதங்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

குறிப்பு: விழா மேடையொன்றில் எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பி.சுசீலா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

You might also like