தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது. அப்படி நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 10 மசோதாக்கள் விவரம்:
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா.
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா.
3) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா.
4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா.
6) தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.
7) தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா.
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா.
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா.
– தமிழ் பாலன்