vels

’இந்தியன் -2‘ படத்தின் நேரம் குறைப்பு!

vels

ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன்‘ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளிவந்தது. நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு வசூலையும் குவித்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் -2‘ எனும் பெயரில் உருவானது. நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்தப்படம் கடந்த 12ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியானது.

கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்தியன் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

‘இந்தியன் 2‘ திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் 3 மணி நேரம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் சுட்டிக்காட்டினர்.இதையடுத்து 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

‘இந்தியன் -3‘ படம் வரும் பொங்கல் திருநாளில் ரீலீஸ் ஆகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.

vels
You might also like