நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!

வித்தியாசமான கண் பரிசோதனை:

****

“சார்… இந்த போர்டைப் பாருங்க… இதிலே எழுதியிருக்கிறது தெரியுதான்னு பாருங்க”

“நேரு.. தெரியுதா?”

“நல்லாத் தெரியுது”

“இந்திரா காந்தி?”

“தெளிவாத் தெரியுது”

“எமர்ஜென்சி?”

“ரொம்பத் தெளிவாத் தெரியுது”

“நீட்?”

“தெரியலேயே”

“பணமதிப்பிழப்பு?”

“க்ளியரா இல்லையே”

“ஜி.எஸ்.டி?”

“சுத்தமாத் தெரியலை”

“மணிப்பூர்?”

“கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையே”

“இதெல்லாம் கண்ணிலேயே படலையா?”

“ஆமா.. தெரியலை. எனக்கு என்ன டாக்டர் பிரச்சினை?”

“வயசானாலும் உங்களுக்குத் தூரத்திலே இருக்கிறது மட்டும் தெரியுது. பக்கத்திலே இருக்கிறதெல்லாம் தெரியலை. வித்தியாசமான பார்வைக் குறைபாடு தான்”

“இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா?”

“இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி பண்ண முடியும்”

“அதுக்கு என்ன பண்ணனும் டாக்டர்?”

“முதலில் வெளியே போய் அவங்களைப் பாருங்க.. போங்க”

– லியோ

You might also like