தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?

அண்மையில் தான் காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பாக தொடர்ந்து நீடித்து வந்த பிரச்சனையில் நதிநீர் ஆணையம் தலையிட்டு தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

தற்போது கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட கேரள அரசு முயற்சிக்கிறது. அந்தத் தடுப்பணைக் கட்டப்பட்டால் தமிழகத்தில் இருக்கிற அமராவதி அணை உட்பட பல பகுதிகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்து நீர்ப் பாசன வசதி பெறும் பகுதிகளில் சிரமங்கள் ஏற்படும்.

இப்படி அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கான நீர் ஆதாரம் குறித்த பிரச்சினைகள் ஏற்படும்போது உச்சநீதிமன்றமோ அல்லது பசுமைத் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளோ தலையிட்டு சமாதானப்படுத்த வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும் இந்த குறிப்பிட்ட மாநிலங்களை இணைத்து தான் திராவிடம் என்ற நாம் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னமும் திராவிடம் என்கின்ற சொல் இங்கே அரசியல்ரீதியாக புழக்கத்தில் இருக்கின்றது.

ஆனால் அதேசமயம் நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.

அந்தந்த மாநிலங்கள் அதே நீர் ஆதாரத்தை வைத்து குறைத்து அந்தந்த மாநில அரசியலை பேசிக் கொண்டிருக்கின்றன.

நாம் சகோதரர்களாக பாவித்து அணைத்து கொண்ட மாநிலங்களிலிருந்து இம்மாதிரியான பிரச்சனைகள் எழுவது திராவிடம் என்ற சொல்லாக்கத்திற்கு அர்த்தத்தை உருவாக்காது.

You might also like