முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!

பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு.குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

சட்டம், நூலகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் உள்ளிட்ட 8 துறைகளில் முதுகலை பயின்றுள்ள இவர், தற்போது தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

டாக்டர் எஸ்.கே.அசோக்குமார், டாக்டர் ஹரிதாதேவி ஆகியோரின் நெறிகாட்டுதலின் கீழ் ‘இந்திய அரசியலில் குற்றவியல் நடைமுறை குறித்த விமர்சன ஆய்வு’ (Criminalization of politics in India – A critical study) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட இவர், 2020 ஆம் ஆண்டு ஆய்வேட்டைச் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பிரதாப் ரெட்டி முன்னிலையில் நேற்று (12.05.2021) வாய்மொழித் தேர்வு நடைபெற்று, இவரது ஆய்வேடு ஏற்றுக் கொள்ளப்பட்டு ’முனைவர்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

முனைவர் திரு. குமார் ராஜேந்திரன் அவர்களுக்கு ‘தாய்’ இணைய இதழின் சார்பில் வாழ்த்துகள்!

#முனைவர்_வழக்கறிஞர்_குமார்_ராஜேந்திரன் #பொன்மனச்_செம்மல் #டாக்டர்_எம்ஜிஆர் #தாய் #Criminalization_of_politics_in_India_critical_study #DR_Kumar_Rajendran #MGR #Doctorate #DrMGR

You might also like