ஏற்கனவே தமிழகத்தில் சில தமிழ் ஆளுமைகளின் சிலைகளுக்கு காவி நிறம் பூசப்பட்டு சர்ச்சையாகி இருக்கிறது.
திருவள்ளுவரின் சிலைக்குகூட காவி நிறம் பூசப்பட்டு பரப்பரப்பான செய்தி ஆனது.
இதையடுத்து ஒன்றிய அரசால் அண்மையில் துவக்கி வைக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலும் காவி நிறத்தில் அமைந்து இருந்தது.
தற்போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே பிரசார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசையில் இலச்சினை (லோகோ) காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு இருப்பது மாறுபடையும் விவாதப் பொருளாய் இருக்கிறது.
தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே இப்படிப்பட்ட காவி மயமான உருமாற்றங்கள் நடந்திருக்கின்றன என்றால் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு நிலைமை எப்படி இருக்கும்?