நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். ஆலோசனையில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு தொகுதி இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது எனவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் திமுக இந்திய யூனியன் முஸ்லிம் ராமநாதபுரம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் விடுதலைச் சிறுத்தைகள் விழுப்புரம் சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை திண்டுக்கல் இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம் திருப்பூர் டி.ஆர்.பாலு dmk cmstalin vck villupuram communist congress முகஸ்டாலின் டிஆர்பாலு மதிமுக mdmk congress காங்கிரஸ் dmk-alliance-constituency-alottment-mkstalin