பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக நேற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24- காசுகளுக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் 94 ரூபாய் 24 காசுகளுக்கு டீசல் விற்கப்படும் நிலையில் 92 ரூபாய் 34 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை சென்னையில் 102 ரூபாய் 63 காசுகளாக இருந்த நிலையில் 100 ரூபாய் 63 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

#சர்வதேச_சந்தை #கச்சா_எண்ணெய் #இந்திய_ரூபாய் #பெட்ரோல் #டீசல் #மத்திய_அரசு #International_Market #Crude_Oil #Indian_Rupee #Petrol #Diesel #Central_Govt #Petrol_price_reduce

You might also like