சைதை துரைசாமியின் தர்மமும் துயரமும்!

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்று சொல்லப்படுவதெல்லாம் இயற்கைக்கு முன் செல்லுபடியாகாது.

எம்.ஜி.ஆரிடமிருந்து அவரது மனிதநேயத்தை மட்டும் சைதை துரைசாமி எடுத்துக்கொண்டு, அந்த வழியில் நீண்ட காலமாகப் பயணித்துவருகிறார்.

தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் பொருளாதார சிக்கலால் தயங்கி நின்றுவிடக் என்பதற்காக அத்தனை செலவுகளையும் முன்கூட்டியே ஏற்றுக்கொள்பவர்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் இயன்றதை உடனடியாக செய்துகொடுப்பவர். மனிதநேய அறக்கட்டளைக்கு எந்த ஒரு நபரிடமிருந்தும் உதவி பெற்றுக்கொள்ளாதவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் அரசியலில் பயணித்திருப்பவர்.

சைதை துரைசாமியின் மகனுக்கு இப்படியொரு துயரம் நிகழ்ந்திருக்கக் கூடாது. அத்தனை எளிதில் எவராலும் தாங்கிக்கொள்ளும் துயரம் அல்ல இது. அதனாலே

இதையொட்டி தர்மம் சைதை துரைசாமியை கைவிட்டது என்று பலரும் வருந்திவருகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.

எனக்கு சைதை துரைசாமியை நன்கு தெரியும். அவர் இயற்கையை நன்கு அறிந்தவர். இயற்கை மீது ஒருபோதும் குற்றம் சுமத்த மாட்டார்.

இந்த வலியையும் வேதனையையும் தாங்கிக்கொண்டு, இந்த மாபெரும் துயரத்திலிருந்து மீண்டும் வலிமையாகத் திரும்பிவருவார்.

தர்மம் அவரை கைவிட்டாலும், அவர் தர்மத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்.
*
நன்றி: பத்திரிகையாளர் எஸ்.கே.முருகன் முகநூல் பதிவு

#மனிதநேய_அறக்கட்டளை #சைதை_துரைசாமி #எம்.ஜி.ஆர் #vetri_duraisamy #manithaneya_arakattalai #sadhai_duraisamy #mgr 

You might also like