உணவு எடுத்துக் கொள்வதில் நெறிமுறை அவசியமா?

இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், நாம் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்வது நல்லது.

அதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிசெய்ய சிலவற்றை புரிந்துக் கொள்வதும் பொருத்தமானது.

இரவு உணவு எடுத்துக் கொள்ளும் முறை குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களின் அளித்துள்ள விளக்கங்களைப் பார்க்கலாம்:

  • இரவு உணவுக்குப் பிறகு சிற்றுண்டி வேண்டாம்.
  • இரவு உணவு உண்ட உடனே படுக்க வேண்டாம்.
  • உடல் எடையைக் குறைக்க இரவு உணவில் கார்போ ஹைட்ரேட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.
  • தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு அருந்துவது சிறந்தது. இதனால் அசௌகரியம் மற்றும் சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இரைப்பை ரிஃப்ளக்ஸா நிலை ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் 10-11 மணிக்குள் தூங்குவதை பின்பற்றுகிறார்கள்.
  • உணவு முழுமையாக செரிமானமடைய சுமார் 1.5-2 மணிநேரம் ஆகும். சிக்கலான உணவுக் கூறுகளை உடல் உறிஞ்சி பயன்படுத்தக்கூடிய எளிய வடிவங்களாக உடைப்பதும் இதில் அடங்கும்.
  • தொடர்ந்து, ‘தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை உட்கொள்வது செரிமான அமைப்பு அதன் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த தேவையான நேரத்தை வழங்குகிறது.
  • நாம் உறங்கும் நேரத்திற்கு அருகில் சாப்பிடும்போது, செரிமான செயல்முறையை முடிக்க உடலுக்குப் போதுமான நேரம் இருக்காது, இது அஜீரணம், அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும். 
  • இரவு உணவை தாமதமாக உட்கொள்ளும் போது அவை இதயத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை உட்கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இரவு உணவை மிகவும் விரைவாக உட்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  •  உறங்கச் செல்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு உணவிற்குப்பின் 20 நிமிடம் வாக்கிங் செய்து விட்டு வரலாம் இது உணவு செரிமானம் ஆவதை எளிதாக்கும்.
  • இரவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கக்கூடும் 

– ஆர். மகேஷ்வரி, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரி.

You might also like