குளிர்காலங்களில் சைனஸ் பிரச்சனை அதிகமாவது ஏன்?

மூக்கடைப்பு அல்லது சைனஸ் தொற்றால் தலைபாரம், சளி, இருமல் போன்றவை குளிர்காலத்தில் நம்மை மோசமாக உணர வைக்கக் கூடிய ஒரு சில பிரச்சனைகள்.

ஆஸ்துமா, பிரான்கைட்டிஸ், மூட்டு வலி, ஹைப்பர் டென்ஷன், டயாபடீஸ் போன்றவை குளிர்காலத்தில் மோசமாகலாம். இதில் சைனஸ் பிரச்னையும் அடங்கும்.

வெப்பநிலை குறைவதால் ரத்த நாளங்கள் சுருங்கி அதன் விளைவாக உடலில் உள்ள பிற உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது.

உலர்ந்த வானிலை சைனஸ் பிரச்சனைக்கு பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய காரணம்.

குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை அதிகம் ஆவதற்கான காரணங்கள் என்ன?

உலர்ந்த காற்று:

சைனஸ் பிரச்சனை தூண்டப்படுவதற்கு இது முக்கியமான காரணமாக அமைகிறது.

குளிர்ந்த, வறண்ட காற்று சுவாசப் பாதையை வறண்டு போகச் செய்து எரிச்சல் அடையச் செய்கிறது.

இதனால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது.

வீட்டிற்குள் உள்ள ஒவ்வாமை பொருட்கள்:

குளிர்காலங்களில் நாம் பெரும்பாலும் வீட்டிற்குள் நேரத்தை செலவிடுகிறோம். வீட்டிற்குள் இருக்கக்கூடிய தூசு, பூச்சிகள், பூசணம் போன்றவை சைனஸ் அறிகுறிகளை தூண்டலாம்.

சைனஸ் பிரச்னைக்கான சிகிச்சை:

நீராவி இழுத்தல்:

நீராவியை உள்ளிழுத்தல் சுவாசப் பாதைகளுக்கு ஈரப்பதத்தை சேர்த்து நிவாரணம் அளிக்கும்.

நீங்கள் ஹியூமிடிஃபையர்களை பயன்படுத்தலாம், சுடுதண்ணீரில் குளிக்கலாம் அல்லது ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு சில துளிகள் யூகலிப்டஸ் அல்லது புதினா அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து ஒரு போர்வை கொண்டு முகத்தை மூடி ஆவியை உள்ளிழுக்கலாம்.

உங்களையும் உங்கள் வீட்டை சுற்றி இருக்கக்கூடிய இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் போதுமான அளவு காற்றோட்டம் வருவதை உறுதி செய்யுங்கள்.

வெதுவெதுப்பான ஒத்தடங்கள்:

முகத்தில் வெதுவெதுப்பான ஒத்தடம் பயன்படுத்துவது சைனஸ் வலி மற்றும் அழுத்தத்தில் இருந்து நிவாரணம் தரும்.

ஒரு சுத்தமான காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து அதனை உங்கள் மூக்கு மற்றும் தாடை பகுதியில் ஒரு சில நிமிடங்களுக்கு வையுங்கள்.

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு சைனஸ் அறிகுறிகள் மோசமாகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவும்.

மேற்கண்ட வழிமுறைகளை உபயோகித்து சைனஸ் பிரச்சனையை தவிர்க்கவும்.

– மகேஸ்வரி, மாணவி, டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரி.

You might also like