கலைஞர் 100 விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு!

தமிழ்த் திரையுலகம் சார்பில் நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – கலைஞர் 100 விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் அழைத்தனர். விழாவில் நிச்சயம் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

இதேபோல் கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு கலைஞானி கமலஹாசன் அவர்களுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

இவருக்கு அழைப்பு விடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேரில் சென்று அழைத்தனர். விழாவில் நிச்சயம் வந்து கலந்துகொள்வதாக கமலஹாசனும் உறுதியளித்தார்.

You might also like