ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!

ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான ‘அண்டர்’ நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது.

ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல் மனதிற்கு மிக
நெருக்கமாக இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டதால் இந்த உணவகத்தில் உணவருந்துவது சிலிர்ப்பான அனுபவத்தைத் தருவதாக இங்கு சென்று வரும் வாடிக்கையாளர்கள் மகிழ்கிறார்கள்.

இந்த அற்புதமான உணவகம் நேரடியாக கடல் படுக்கையில் அமைந்துள்ளது.

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இந்த அண்டர் உணவகத்தை நார்வேயின் பிரபல கட்டிடக்கலை நிறுவனமான ஸ்னோஹெட்டா வடிவமைத்துள்ளது.

ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உணவகம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இங்கு சாப்பிட 7000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இங்கு 18 வகையான கடல் உணவுகள் மற்றும் மதுபானம் அடங்கிய ஒரு காம்போவின் விலை மட்டுமே, 30 ஆயிரம் ரூபாய் என்றாலும் நீருக்கடியில் அமர்ந்து சாப்பிட, பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

You might also like