அழகுப் பொருட்கள் விற்பனையில் களமிறங்கிய நயன்தாரா!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதுபோக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினர் நயன்தாரா.

இதன் முதற்கட்டமாக Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கினார். இந்த நிறுவனத்தை நடிகை நயன்தாரா, சரும மருத்துவர் ரெனிட்டா ராஜன் என்பவருடன் இணைந்து தொடங்கினார்.

நயன்தாரா இந்த பிஸ்னஸ்ஸை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் தனது அழகு சாதன பிஸ்னஸ்ஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சருமப் பொருட்கள் விற்பனையில் இறங்கி இருக்கிறார்.

சருமத்தை பாதுகாக்கும் 9 ஸ்கின் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூரில் தொடங்கி உள்ள இந்த நிறுவனத்தின் தொடக்க விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த 9 ஸ்கின் நிறுவனம் இயற்கை மற்றும் அறிவியல் கலந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட்களை தயாரிக்கிறது. இது பற்றிய கூடுதல் தகவல்களை http:9Skin.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

You might also like