சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நீதிபதி கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.