ஜான் பென்னிகுக்கின் மங்காத புகழ்!

கவிஞர் அ.வெண்ணிலா

லண்டன் சென்றுள்ள கவிஞர் அ.வெண்ணிலா, பென்னிகுக் படித்த பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு.

சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும் சகோதரனும் இறந்தவுடன் சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்கிறார் தாய் சாரா.

அங்கு ராணுவ வீரர்களின் குழந்தைகளின் பிள்ளைகள் படிப்பதற்காக இருந்த செல்ட்டன்ஹாம் காலேஜில் பென்னியைச் சேர்த்தார்.

பென்னி படித்த பள்ளி (3-18 வயது வரையினர் படிக்கும் கல்லூரி என்கிறார்கள்) வளாகத்தில் நடந்து திரிந்தபோது, கூகுளில் பள்ளியில் படித்த புகழ்மிகு ஆளுமைகளில் பென்னியின் பெயர் இல்லை.

ஆனால், அவர் படித்து முடித்து 173 ஆண்டுகள் கழித்து 7000 கிமீ பயணித்து ஓர் எழுத்தாளர் தேடி வரும் அளவுக்கு அவர் புகழ் மங்காமல் இருப்பதில் இருந்தே அவரின் ஆளுமை புரியவரும்.

You might also like