பத்து அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆயுஷ் பதோனி ஒரு ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்களிலும் வெளியேறினர். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்களும், தேவ்தட் படிக்கல் 26 ரன்களும் எடுத்தனர்.
அஷ்வின் மற்றும் ரியான் பராங் ஆகியோர் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை சந்தித்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.