இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வமணி, “இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது.
சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் பேரரசு, “ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல், இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்றார்.
நடிகர் நாசர், “நான் நடிக்கவில்லை ஆனால் என் நண்பர்கள் நிறைய பேர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பார்க்க நன்றாக உள்ளது. படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று வாழ்த்தினார்.
நடிகர் தம்பி ராமையா, “காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது.
இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள்” என்றார்.
நடிகர் அஜ்மல், “சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது.
இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும்” என்றார்.
துஷ்யந்த் பேசியபோது, தனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் PG மோகன், “இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சத்யராஜ், “இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை.
தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட்தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும்” என்று வாழ்த்தினார்.