ஏ.டி.ஜி.பி வனிதா
கடந்த வாரம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில், சென்னையில் இருந்து புறப்பட்ட ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் வடமாநில இளைஞரை தாக்கி ஆபாசமாக பேசும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த சமபவத்தை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்த மகிமைதாஸ் என கண்டறிந்து விழுப்புரம் ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்த சமபவம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி வனிதா, இதுபோல ஓடும் ரயிலில் யாரேனும் தாக்குதல் நடத்தினால் குற்றம் செய்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
அதோடு ரயில் பயணத்தின்போது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட எந்தக் குறையாக இருந்தாலும் பயணிகள் 1512 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் ஏ.டி.ஜி.பி வனிதா அப்போது தெரிவித்தார்.