விஜய் நடிக்கும் புதிய படமான பெயரிடப்படாத ‘தளபதி 67’ படப்படிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 180 பேருடன் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். தனி விமானத்தில் சென்றவர்கள் பற்றிய விவரமும் வெளியாகியுள்ளது.
நடிகைகள் திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இப்படத்திற்கு அனிருத் இசைமயமைக்கிறார்.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு. டான்ஸ் மாஸ்ட்ராக தினேஷ் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜனவரி முதல் வாரம் தொடங்கினார்கள். ஏற்கனவே இப்படத்தின் முதல் ஷெட்யூல் சென்னை. அடுத்து மூணாறில் நடத்தினார்கள்.
தற்போது இரண்டாவது ஷெட்யூலுக்காக காஷ்மீர் புறப்பட்டுள்ளார்கள்.
பிப்ரவரி முதல் தேதி முதல் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். அங்கு விஜய், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளும், விஜய் – திரிஷா இடையேயான காதல் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.