ஜெர்மனியில் வாழும் ஆய்வாளர் சுபாஷினி, தங்கம்பாடி சென்றுவந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “1706 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இருந்து தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த பார்த்தலோமஸ் சீகன்பால்க் தன்னை தமிழ் மண்ணுக்கு வந்த பிறகு ஒரு தமிழ் மாணவனாக மாற்றிக் கொண்டார்.
இரண்டே ஆண்டுகளில் தீவிரமாக தமிழைக் கற்று 1710 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பள்ளியை உருவாக்கினார்.
அதே ஆண்டு அவர் உருவாக்கிய அச்சகத்திற்கு இங்கிலாந்தில் இருந்து அச்சு எந்திரம் வந்து சேர்ந்தது.
இதில் தான் தமிழில் முதல் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு பைபிள் அச்சு நூல்களாக வெளிவந்தன.
தனது 36 வயதிற்குள் தமிழ் ஜெர்மன் மற்றும் லத்தின் இலக்கண நூல்கள், தமிழ்நாட்டில் தான் சந்தித்த பண்பாட்டு மற்றும் வழிபாட்டு தகவல் களஞ்சியம் என குறிப்பிடத்தக்க இலக்கண இலக்கிய படைப்புகளை வழங்கிய ஐரோப்பிய தமிழ் அறிஞர்.
இவர் பயன்படுத்திய மேசையில் அமர்ந்து வருகையாளர் கையேட்டில் எனது கையெழுத்தை பதிந்தது விவரித்து கூறமுடியாத மனஉணர்வை அளிக்கின்றது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.