வாழ்வை ரசனையோடு வாழ்!

– வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனைகள்

சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும்.

ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது.

அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.

தானம் கொடுப்போரைத் போதனைகள் சொல்லி தடுக்கக் கூடாது.

யாரிடத்தில் தயவு அதிகம் இருக்கிறதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கிறார்.
நல்ல நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது. நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது.

எனக்கு சித்திகள் எல்லாம் தருகின்ற தெய்வமாக விளங்குவது சத்தியமே.
பசியால் வாடுவதைக் கண்டும் காணாமல் போவதும் குருவை வணங்காமல் இருப்பதும் கூடாது.

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.

அனுபவிக்க தகுந்தன அனுபவி.

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.

ஜீவகாருண்யத்தை கடைபிடி.

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

 மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!

அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
வாழ்வை கண்டு களி.

வாழ்க்கை வாழ்வதற்கே. ரசனையோடு வாழ்.

தீய செயல்களால் ஒற்றுமையான குடும்பத்தைப் பிரிப்பதும், தந்தை, தாய் சொல்லை மீறி நடப்பதும் கூடாது.

ஏதும் இல்லாத ஏழைகளுக்கு இரக்கப்பட்டு ஈவதே ஜீவகாருண்யம்.

தவநெறியில் வாழ்வோரை ஏளனமாகப் பேசக்கூடாது.

வாக்கு வேறு, மனம் வேறு, செயல் வேறு என்கிற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

உங்கள் நம்பிக்கையின் சிதைவுகளைக் கண்டுபிடியுங்கள்.
அதன்பிறகே, அற்புதங்கள் நடக்கும்.

உண்மையை மட்டும் பேசுங்கள்; அது உங்கள் மீதுள்ள மரியாதையை
பாதுகாக்கும்!

You might also like