நீலத்திமிங்கலமும் பிரமாண்ட தகவல்களும்!

நீலத்திமிங்கலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள்.

நீலத்திமிங்கலம் பற்றி சில தகவல்கள்…

* ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும்.

* நீலத்திமிங்கலம் கடலில் வாழும் பாலூட்டி வகையைச் சார்ந்தது.

* இது 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டிருக்கும்.

* இதன் எடை 150 டன்கள் வரை இருக்கும்.

*நீலத்திமிங்கலத்தின் குட்டி பிறக்கும்போதே 2 டன்கள், அதாவது 2 ஆயிரம் கிலோ எடை இருக்குமாம்.

* இது 80 முதல் 90 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இதுவரை கண்டறியப்பட்ட நீலத் திமிங்கலத்தின் அதிகபட்ச வயது 110 ஆண்டுகள்.

* இது எழுப்பும் ஒலி ஜெட் விமானத்தின் எந்திர ஒலியை விட அதிகமாக இருக்கும். அதாவது, ஏறத்தாழ 188 டெசிபல்கள்.

* கிரில் எனப்படும் சிறு இறால் வகை மீன்களை திமிங்கலங்கள் விரும்பி உண்ணும். ஒரு நாளுக்கு ஒரு திமிங்கலம் உண்ணும் உணவின் எடை ஏறத்தாழ 4 டன்கள்.

அதாவது ஒரு யானையின் எடைக்குச் சமமான ஒரு கிரில் மீன் கூட்டத்தை உண்ணும்.

* ஒரு நீலத்திமிங்கலத்தின் நாக்கு ஏறத்தாழ 2.7 டன்கள் வரை இருக்கும். இது ஒரு வளர்ந்த பெண் யானையின் எடைக்குச் சமம்.

* ஒரு திமிங்கலத்தின் எடை 3 ஆயிரம் மனிதர்களின் எடைக்குச் சமமாக இருக்கும்.

-நன்றி: தினந்தந்தி.

You might also like