பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 4-வது சுற்றில் 9 காளைகளை அடக்கி 3-வது இடத்தில் இருந்த பாலமேடு பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவரை காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து விளையாட்டு திடளில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் பொங்கல் விழாவையொட்டி திருச்சி பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதனை காண வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் பார்வையாளர் பகுதியில் நின்றிருந்தபோது அவரை ஜல்லிக்கட்டு காளை திடீரென முட்டியது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு வீரரும், திருச்சியில் பார்வையாளரும் காளைகள் முட்டி உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.