டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள ஒரு செயலி!

இந்த உலகத்தில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகள்.

அவர் என்ன எழுதியுள்ளார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மருந்து கடைக்காரர்களுக்கே பல நேரங்களில் புரிவதில்லை.

சில சமயங்களில் அவர்கள் தவறான மருந்தைக்கூட தந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் பிரச்னையை தீர்க்க ‘கூகுள்’ நிறுவனம் முன்வந்துள்ளது.

டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்து கொண்டு, என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நமக்கு தருவதற்காக, ஒரு செயலியை தயார் செய்து வருகிறது. இதற்காக மருந்தாளுனர்களுடன் கூட்டு வைத்துள்ளது.

இதற்கான செயலி வாயிலாக மருந்து சீட்டை போட்டோ எடுத்தால், அதில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதை கூகுள் கண்டுபிடித்துத் தந்துவிடும்.

இது சம்பந்தமான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் கூகுளின் இந்த செயலி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like