நடிகர் திலகமும், இசை அருவியும்!

அருமை நிழல்:

துவக்கத்தில் ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடி ரஸ்தாவில் இயங்கிய போதிருந்தே கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம்.

திருவிளையாடல், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

“தென்றலோடு உடன் பிறந்தாள்” என்று பாடவும் செய்திருக்கிறார்.

சிறப்பு வாய்ந்த கணீர்க் குரல் இறுதிக் காலத்தில் சோழவந்தானுக்கு அருகில் உள்ள முள்ளிப்பள்ளத்தில் வசித்தபோது, பக்கத்தில் பி.மாதவன் இயக்கிய ‘பட்டிக்காடா பட்டணமா?’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

மூக்கையன் கதாபாத்திரத்தில் நடித்த மேக்கப்புடன் மகாலிங்கத்தின் வீட்டுக்கு வந்திருந்தார் சிவாஜி. அப்போது 1972 ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

நன்றி: நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள்.

You might also like