‘ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?

பிரதமர் மோடி தெரிவித்துள்ள ‘ஒரே நாடு; ஒரே காவல்துறை சீருடை’ என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்த கருத்து.

****

ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

எல்லா மாநிலங்களும் ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடையை ஏற்றுக் கொள்ளாது.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து காவல்துறை, இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள்.

கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில காவல்துறையின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கின்றன.

இதேபோல மத்திய அரசு காவல்துறை பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை.

அதனால் மாநிலங்கள் ஒரே காவல்துறை சீருடை என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

-ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதி

நன்றி: தினத்தந்தி 03.11.22 

You might also like