தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரிக்கப்படும் திரைப்படம் ‘மைக்கேல்’. நடிகர் சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள்.

:மைக்கேல்’ படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. மேலும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

எண்பதுகளில் தொடங்குவது போன்று கதை அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி… ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

மேலும் ‘மைக்கேல்’ திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.

படத்தின் காதல் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளைப்போல் சுவராசியமாக இருக்கிறது. டீசரில் சந்தீப் கிஷன் – திவ்யான்ஷா கௌஷிக் இடையேயான முத்தக் காட்சியும் இருக்கிறது.

விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றமும், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றமும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

‘மைக்கேல்’ படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

You might also like