ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக!

“ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளைவிட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதிகளோடு இருக்கின்றன என்பது சரியே. அதற்காகச் சற்றுக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துக் கொள்வதிலும் தவறு இல்லை.

ஆனால், ஒரேயடியாகக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள கட்டணங்களை மறுபரிசீலனை செய்து, புதிய கட்டணப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஆம்னி பேருந்து நிறுவனங்களிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 67-ன்படி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் இருப்பதாக 2016-ல் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே, ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களை முறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு இனிமேலும் தயக்கம் காட்டவோ, தாமதிக்கவோ கூடாது.”

****

நன்றி: இந்து தமிழ் திசை தலையங்கத்தில் இருந்து அக்டோபர் 7, 2022.

You might also like