சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
அதே போல, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, தென் மேற்கு பருவமழை காரணமாகவும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
செப்.4-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.