மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!

– சமூக பாதுகாப்புத் துறை 

பள்ளி மாணவ – மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதில், “காப்பு, கம்மல், செயின், கயிறு ஆகியவை அணிந்தும், பச்சை குத்தியும் பள்ளிக்கு வரக்கூடாது” என, மாணவ – மாணவியருக்கு சமூக பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின்படி, “மாணவர்களுக்கு நீதி நெறி கதைகள், தெனாலிராமன், காப்பியம், நாட்டுப்பற்று கதைகளை, ஆசிரியர்கள் எடுத்து கூற வேண்டும். மாணவ – மாணவியரிடையே அமைதி கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர், மாணவ – மாணவியர் இடையிலான சரியான உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும். நேரம் தவறாமை, நாட்டுப்பற்று, தூய்மை, வாய்மை,

இறையுணர்வு, ஈகைப்பண்பு, விடா முயற்சி, துணிவுடைமை, பணிவுடைமை மற்றும் நேர்மை தொடர்பான, தலைப்புகளில், ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like