“தமிழோடு கேன்ஸீக்கு” – பார்த்திபன்!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நாளை (17-ம் தேதி) தொடங்கி 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நயன்தாரா உள்ளிட்ட இந்திய திரைப்பட பிரபலங்கள் பலருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபன் நடித்து இயக்கி உள்ள ‘இரவின் நிழல்’ படம் திரையிடப்படுகிறது.

இந்தப் படத்தை உலக சாதனைக்காக ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர்.

இது குறித்து பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் ‘இரவின் நிழல்’ திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன் என்று கூறியுள்ளார். மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்டரி படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

You might also like