எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

– நாராயணகுரு எழுப்பிய கேள்வி

நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர்.

கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும்.
அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘நாராயணகுரு’ என்ற புத்தகத்திலிருந்து சிறு பகுதி:

“நாராயணகுருவின் அறுபதாவது பிறந்த நாள் முடிந்ததும் சென்னைக்குப் பயணம் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரும், ஜஸ்டிஸ் கிருஷ்ணனும் அழைப்பு அனுப்பியிருந்தனர்.

இரயிலில் பயணம் செய்த குருவிற்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. ஐரோப்பிய உடை தரித்திருந்த ஒரு இந்திய ஆண் குடிமகன் குருவைப் பார்த்து அக்கறையாக விசாரித்தார்.

“உங்கள் பெயர் என்ன?”

“நாராயணன்”

“நீங்கள் எந்த ஜாதி?”

“உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? யோசியுங்கள்”

“உங்கள் தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை” குரு உடனே பதில் தந்தார்.

“என்னைக் கண்ணால் கண்டபின் நான் எந்த ஜாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சொல்வதைக் கேட்டு எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”

இந்நிகழ்ச்சியை சென்னையில் பேசும்போது ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார் நாராயணகுரு.”

You might also like