கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது!
டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், “கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான கால கட்டத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “புதிய வகை கொரோனா பரவி வருவதால் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது. இருப்பினும், உலக அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், அதைத் தயாரிப்பதிலும் இந்தியா தனது திறமையைச் செயலில் காட்டியுள்ளது. இந்தத் தடுப்பூசிகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய பெரிதும் வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.
03.03.2021 12 : 55 P.M