தங்கத்திற்கு பதில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தலாம்!
தங்க மோதிரத்திற்காக செலவிடும் ரூ.755.83 கோடியை இந்த வகையில் செலவழித்திருந்தால் பல பேருக்கு அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இடைத்தேர்தலில் தாக்கத்தை தருமா தவெக திட்டங்கள்?
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த தொகுதிகள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. அதிலும் தமிழக முதல்வரான விஜய் மதுராந்தகத்திற்கு சென்று அங்கு பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தபிறகு ஊடகங்கள் எல்லாம் படு சுறுசுறுப்பாகி, இடைத்தேர்தலின்போது தன்னை நோக்கி எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு பன்ச் டயலாக் பாணியில் சூடாக பதிலளித்திருந்தார் விஜய். குறிப்பாக பாஜகவைப் பற்றி பேசியது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டபோதும் முதல்வர் விஜய் குறிப்பிட்ட மாதிரியே […]
யாரை யார் விழுங்கப் போகிறார்கள்?
செய்தி : தவெகவை அதிமுக விரைவில் விழுங்கும்; ஜனநாயகப் படுகொலை செய்தவருக்கு தக்க பதிலடி கொடுங்கள். – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம். கோவிந்த் கமெண்ட் : நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த உடனேயே போதுமான எண்ணிக்கை தவெகவிற்கு கிடைக்காத நிலையில், ரகசிய பேச்சுவார்த்தைகளெல்லாம் நடத்தியது யார்? அப்போது, நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் பல தலைவர்கள் பொதுவெளியில் போட்டு உடைத்தார்கள். அதில், அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு […]
யாருக்கானது இந்த பொருளாதார வளர்ச்சி?
செய்தி : 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமானதுதான். தற்போதைய வளர்ச்சி வேகத்தையும், ஸ்டார்ட்அப் புத்தாக்கத்தையும் இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தால் இந்த வளர்ச்சியை எட்டிவிடலாம். – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிந்த் கமெண்ட் : மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சொல்கிறபடி 10 சதவீத அளவுக்கான வளர்ச்சி சாத்தியமானதுதான். உலகளவில் சில ஏகாதிபத்திய நாடுகளினால் உருவாகும் பொருளாதார சீரழிவு சராசரியான மனிதர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் வேலைகளை […]
தவெக அரசில் யார் முடிவெடுக்கிறார்கள்?
தவெக ஆட்சி அமைத்த நான்கு மாதங்களுக்குள் சிலரது நியமனங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட பிறகு திரும்பவும் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. சில செயல்திட்டங்களுக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்த பிறகு பின்வாங்குதலைச் சந்தித்திருக்கின்றன. மிக குறுகிய காலத்திற்குள்ளேயே இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது, தவெக அரசின் முக்கிய முடிவுகளை தீர்மானிப்பது யார்? என்கின்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதிலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இந்தத் தகவல் பரவிய சில நாட்களுக்குள் அரசாணையும் வெளியிடப்பட்டது. […]
மதுரை காந்தி மியூசியத்திற்கு இத்தனை சிறப்புகளா?
350 ஆண்டுகளைக் கடந்தாலும் நிமிர்ந்த கம்பீரத்துடன் இருக்கிறது மதுரையில் இருக்கிற அந்தக் கட்டடம். 1670 வாக்கில் ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாக இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இதைச் சுற்றிலும் நீர் நிறைந்த 5 கண்மாய்கள் குளிர்ச்சியுடன் சின்னத் தீவு மாதிரி இருந்த அந்த சரித்திரம் புரளும் அரண்மனை, பின்பு பிரிட்டிஷ் கலெக்டர் பங்களாவாக மாறியது. தற்போது அந்த இடத்தில் மகாத்மா காந்தி நினைவகம் உள்ளது. இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப் பிறகு உருவான முதல் மியூசியம் […]





