திமுக எல்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்!
செய்தி: பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்யைக் கடுமையாக எச்சரித்து ‘எலும்பை உடைப்பதாக’ பேசிய திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. கோவிந்த் கமெண்ட்: சட்டசபைக்குள் வந்தால் வன்முறையை நிகழ்த்தப் போவதாக எச்சரித்து பேசியவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், தற்போது சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பு அவரை ஜாமீனில் விடுவித்திருக்கிறது. சட்டசபைக்குள் நுழையவிட்டிருக்கும் எல்லாம் வல்ல மார்க்கண்டேயனை இனி நன்கு சோதித்த பிறகு உள்ளே அனுப்புவது ஜனநாயகத்திற்கு நல்லது.
தவெக அரசு பற்றி சீமானின் விமர்சனம்!
செய்தி: திமுக போலவே தவெகவும் விளம்பர அரசுதான்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவிந்த் கமெண்ட்: இன்றைக்கு தவெக அரசைப் பற்றி பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்தான், தேர்தலுக்கு முன்பு வரை திமுகவை உள்ளுர் மொழியில் சொன்னால், கழுவி ஊற்றாத குறையாகப் பேசினார். நாகூர் ஹனிபா பாடலை சற்றே மாற்றி கலைஞரைப் பற்றி படு தீவிரமாக பேசினார். தேர்தல் முடிந்தபிறகு அதே திமுகவைப் புகழ்ந்தும் பேசியிருக்கிறார். அதேமாதிரியே தவெக அரசைப் […]
வைகோ, அண்ணாமலையின் சேவையும் தேவையும்!
செய்தி: கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கி வைத்த அண்ணாமலை! – மக்கள் பணியும், இயற்கையைப் பாதுகாப்பதும் முக்கியம் என அண்ணாமலை கருத்து. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கண்மாய், ஏரிகளில் நிறைந்திருக்கிற சீமைக் கருவேலமரங்களை வெட்டிச் சாய்த்து சுத்தப்படுத்தும் வேலையில் இருக்கிறார். இப்போது அதே பாணியில் அண்ணாமலையும் களத்தில் இறங்கி முதலில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் சுத்தப்படுத்த வேண்டிய இடங்கள் ஏராளமாக […]
காங்கிரசுடன் புது உறவா?
செய்தி: காங்கிரஸ் சொல்வதைவிட மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கேட்கிறார்! – அமைச்சர் நிர்மல்குமார் கோவிந்த் கமெண்ட்: சில சமயங்களில் சில வியப்பூட்டும் நிகழ்வுகளும் தமிழக அரசியலில் நடக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி மாறி தவெகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது காங்கிரஸ். அதையடுத்து நாடாளுமன்றத்தில்கூட காங்கிரசுடன் சேர்ந்து அமர மாட்டோம் தனி இருக்கைகள் தேவை என்று வலியுறுத்தும் அளவுக்குப் போன காங்கிரஸ், கர்நாடக முதல்வரான டி.கே.சிவக்குமாருடன் நல்ல தொடர்பில் திமுக […]
பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி அமையப் போகிறது?
எந்த எதிர்க்கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஜனநாயக ரீதியான முறையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.
அன்றே வழிகாட்டிய தமிழக மாணவர்கள்!
டெல்லியில் நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்த ஒரு சொல்லின் வழியே இயக்கமாக உருப்பெற்று, சமூக வலைத்தளங்களில் தன்னை நிலைநிறுத்தி, அதுவே நாடு முழுக்கப் பரவி போராட்ட வடிவமும் எடுத்திருக்கிறது. இதற்கு காரணமான மூலச்சொல், ‘கரப்பான் பூச்சி’. எந்தவிதமான அரசியல் சார்புகள் அற்றுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கின்ற இயக்கம் உருவாகி, போராட்ட வடிவம் எடுத்தபோது, அது கையாண்டது இந்திய சுதந்திரப் போராட்ட மரபை அனுசரித்த காந்திய வழியில் தான். அதை சாட்சியப்படுத்தும் விதமாக அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் […]





