‘உலக உணவு தினம்’ ஏன் இவ்வளவு முக்கியம்?
போருக்கு ஆயுதமாகும் பசி : உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டியல் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பசியை எதிர்த்துப் போராடுவதற்கும், மோதல் பகுதிகளில் அமைதிக்கு பங்களிப்பதற்கும், போர் மற்றும் மோதலுக்கான ஆயுதமாக பசியைப் பயன்படுத்துவதை நிறுத்துவதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது. அதேபோல் மாறிவரும் உணவுப் பழக்கம் […]
மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்ட மயக்கவியல் துறை!
அக்டோபர் 16 : உலக மயக்கவியல் தினம் மயக்கவியல் என்பது, மருத்துவத் துறையில் இன்றியமையாத ஒன்றாகும். காரணம் இத்துறை மட்டும் இல்லாமல் போயிருந்தால், அறுவை சிகிச்சையென்பது வலி நிறைந்த ஒன்றாகவே இன்றளவும் இருந்திருக்கும். ஏனெனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, அதாவது மயக்கவியல் மருந்துகள் கண்டுபிடிக்கும் முன்புவரை அறுவை சிகிச்சை செய்யும்போதேவும் எவ்வித மயக்க மருந்தும் நோயாளிக்கு அளிக்கப்படாது. மாறாக நோயாளியை அவர் மயக்கமடையும் வரை தாக்கி, அவர் அம்மயக்கத்திலிருந்து தெளிவதற்குள் அறுவை சிகிச்சைகளை செய்வர். சில […]
கர்ஜனைக்கு ஓய்வு தந்த தருணத்தில் சிவாஜி!
இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி கணேசனை வைத்து ‘ப’ என்ற எழுத்தில் தொடங்கும் பல குடும்பக் காவியங்களை இயக்கியுள்ளார். 1962-ல் ‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படம் அவற்றில் ஒன்று. படிப்பை விட மனிதநேயமும் பாசமுமே முக்கியம் என்பதை அழகாக விளக்குகிய படம் இது. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன அதில், “பொன்னொன்று கண்டேன், பெண் அங்கு இல்லை…” – பி.பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் […]
காற்றில் கரையாத ஆற்றல் பெற்ற வாலியின் பாடல்கள்!
கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் கொடிகட்டிக் கோலோச்சிய காலத்திலேயே அவர்களுக்கு எதிர்க்கடை போட்ட துணிச்சல்காரர் கவிஞர் வாலி. வியப்பு அவருக்கும் அமோகமாக வியாபாரமாயிற்று. எம்.ஜி.ஆருக்கென்று மக்களிடத்தில் ஒரு மனவடிவம் உண்டு அதை உருவாக்கியவர்களுள் பெரும்பங்கு வகிப்பவர் வாலி. சரியாகச் சொல்வதனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபோது, “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்பது போன்ற வாலியின் பாடல்களையே தம் அரசின் ஐந்தாண்டுத் திட்டமாகக் கொண்டார். ஏன் நீங்கள் திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதில்லை? […]
டெல்லி ஜந்தர் மந்தரும் தமிழ்நாட்டு மெரினாவும்!
கடந்த 10-ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, போராட்டத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் திரளாகப் பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர். அப்போது நடந்த கடுமையான ஒடுக்குமுறையை டெல்லி வாழ் மக்களும் ஊடகம் வழியாக இந்திய மக்களும் நன்கு அறிவார்கள். டெல்லியில் இத்தகைய போராட்டங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. இதுவரை பல போராட்டங்கள் இதே ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு […]
கறுப்பினத் தாரகை ஓப்ரா வின்ஃப்ரே!
நாடு, மொழி, இனம் என பல்வேறு எல்லைகளைக் கடந்து உலகம் ஒரே குடையின் கீழ் பறந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் வேளையிலும், குறிப்பிட்ட துறைகளில் மிளிர்வதற்கு, அழகும் நிறமுமே அடிப்படை தேவையாக உள்ளது. இத்தகைய ஒன்றுதான் ஊடகத்துறை. அதிலும் வெள்ளை நிறமும் வசீகரிக்கும் தோற்றமும் உள்ள பெண்கள் மட்டுமே இதில் பிரகாசிக்க முடியும் என்ற பொதுவான விதி ஒன்று, இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த வாதத்தை எல்லாம் முறியடித்து வெற்றியின் […]












