Browsing Category
திரை விமர்சனம்
நீர்க்குமிழி: ரசிகர்களின் பி.பி.யை எகிற வைத்த கே.பி!
தமிழ்த் திரையின் வெற்றித் தடங்கள் 26
புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஒரு எழுத்தாளர் இயக்குனரானால் என்னவாகும் என்பதற்குப் பதிலளித்து, தமிழ் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலச்சந்தர்.
100 திரைப்படங்களை…
நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!
’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான…
பேய் மாமா – சிரிப்பு வரலையேம்மா!
வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’.
விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம்…
‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!
ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும்.
அந்த வகையில்,…
‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!
புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன.
வெளியீட்டுக்குத் தயாராகி…
‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!
‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது.
இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல்…
‘சங்கத் தலைவன்’ – மாற்றம் காணத் துடிப்பவன்!
‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை நம்புபவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அதனைத் தகர்க்க நினைப்பவர்கள் அனைவருமே அதிகார பீடத்துக்கு பகை ஆவார்கள்.
போராட்டத்தையும் புரட்சியையும் ஆட்களைத் திரட்டும் அமைப்புகளையும் ‘அலர்ஜி’யாக கருதும் ஒரு…
‘கால்ஸ்’: இடைவேளைக்குப் பின் கிடைக்கும் இணைப்பு!
ஒரு திரைப்படத்தின் கரு முழுக்கதையாக விரியும்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் சாத்தியமுண்டு. அப்படி உருப்பெறும் படைப்பு அரைகுறை திருப்தியைத் தந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமாகி இருக்கிறது ‘கால்ஸ்’.
சமீபத்தில் மறைந்த விஜே சித்ரா…
‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!
ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’.
தெலுங்கு திரையுலகில் புதுரத்தம்…
‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!
பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது.…