Browsing Category
சினிமா
கண்ணை நம்பாதே – ஏமாற்றும் தோற்றம்!
‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ எனும் பாடல் எம்ஜிஆர் ரசிகர்களிடையே பிரபலம்.
‘நினைத்தவன் முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளையொட்டி அப்பாடல் அமைந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதனை ரசித்துச் சிலாகிப்பார்கள்.…
ஒரு வார்த்தையை வைத்து வழக்கு முடியும் கதை ‘டி 3’!
நடிகர் பிரஜின் நடிப்பில் 'D 3' என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார்.
மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஒளிப்பதிவாளர். …
ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் மிருணாள் தாகூர்!
துல்கர் சல்மான் ஜோடியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் மிருணாள் தாகூர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
சீதா ராமம் படத்துக்கு பிறகு மிருணாள்…
முன்னிருக்கை ரசிகனுக்கு என்ன மரியாதை?
சிறு வயதில் டூரிங் டாக்கீஸில் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறேன். தனியாகப் பார்க்கத் தொடங்கியபோது தரையில் உட்கார்ந்து பிரமித்திருக்கிறேன்.
தொண்ணூறுகளின் பின்பாதியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ்கள் மூடப்பட்டன.…
ஆஸ்கர் விருது வென்ற தமிழ்க் குறும்படம்!
சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.…
கொன்றால் பாவம் – கேமிரா முன்னே மேடை நாடகம்!
திரையில் படம் ஓட ஓட, அதன் மையக்கதை என்னவென்று புரியும். சில படங்களோ அங்குமிங்கும் அலைபாயும் காட்சிகளின் வழியே, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கதையைச் சொல்லும். அவற்றில் இருந்து வேறுபட்டு, ’இதுதான் கதை’ என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு சில…
வையாபுரியின் சிறப்புத் தோற்றம்!
சென்ற மாதம் வெளியாகி, ரசிகர்களிடையே நிறைந்த வரவேற்பு பெற்ற "தலைக்கூத்தல்" படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் வையாபுரி. வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும்…
அகிலன் – தரணி ஆளத் துடிக்கும் தமிழன்!
உலக அரசியல் பேசுவதற்கான விஷயங்களை வைத்துக் கொண்டு எளிதாக ஒரு ஆக்ஷன் கதையை யோசித்துவிடலாம். ஆனால், அதனைப் படமாக ஆக்குவது ரொம்பவே கஷ்டம்.
முடிந்தவரை அதை முயற்சித்துப் பார்க்கலாமே என்றெண்ணி, தனது குரு எஸ்.பி.ஜனநாதன் பாணியில் கொஞ்சம் பிரச்சார…
ஜானகி அக்காவின் அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்!
- நடிகை விஜயகுமாரி
திருமதி. ஜானகி எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே பழக்கம் உண்டு. எனது கணவர் எஸ்.எஸ்.ஆரும் எம்.ஜி.ஆர். அண்ணன் அவர்களும் கட்சியில் இருந்தபோது அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். நானும் ஜானகி அவர்களை…
மீண்டும் சசிகுமார்!
‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும்.
‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’,…