Browsing Category
கதம்பம்
உதவுவதால் இழக்கப் போவது எதுவுமில்லை!
ஒரு விளக்கு இன்னொரு விளக்கை
ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது,
அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும்;
அதுபோல நாம் பிறருக்கு உதவுவதால்
நாம் இழக்க போவது எதுவுமில்லை.
அதனால் நாம் பெறும் இன்பம்
இரண்டு மடங்காகும்.
வள்ளலார்
மூடநம்பிக்கையின் பலம்!
இன்றைய ‘நச்’!
*
மூட நம்பிக்கை
பலருக்கு அழியக்கூடிய அழுக்கைப் போலிருக்கிறது;
சிலருக்கு அழியாத மச்சத்தைப் போலிருக்கிறது.
உலகம் எனும் பயிற்சிக் கூடம்!
உலகம் ஒரு பயிற்சிக் கூடம்;
அதில் நாம் நல்ல வழிகளில்
நம் வலிமையைப்
பெருக்கிக் கொண்டே
இருக்க வேண்டும்.
விவேகானந்தர்
துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழி!
கஷ்டங்கள் வரும்போது
கண்களை மூடாதீர்கள்,
அது உங்களைக் கொன்று விடும்!
கண்களைத் திறந்து பாருங்கள்
கஷ்டங்களை
வென்று விடலாம்.
- அப்துல் கலாம்
மனிதத்தோடு இருப்பவர்களின் நிலை?
இன்றைய ‘நச்’!
*
மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள் மத்தியில்
மனிதத்தோடு இருக்கிறவர்கள் தான்
குற்றவாளியைப் போல உணர நேரிடுகிறது.
முன்னேற்றத்திற்கான மூன்று வழிகள்!
ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும்
மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்.
அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு.
- ஆப்பிரிக்க பழமொழி
குழந்தைகளின் முன்மாதிரி யார்?
இன்றைய ‘நச்’!
***
முன்பு அன்பான முன்மாதிரிகள்
சுற்றிலும் இருந்தார்கள்;
நம் குழந்தைகள் பார்த்துக்
கற்றுக் கொண்டன.
தற்போது சுயநலமான முன் மாதிரிகள்
சுற்றிலும் இருக்கிறார்கள்;
நம் குழந்தைகள் பார்த்துக்
கற்றுக் கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையை வானவில்லாய் மாற்றுவோம்!
தலையை உயர்த்தாத வரை
நீங்கள் வானவில்லைப்
பார்க்கப் போவது
இல்லை.
- சார்லி சாப்ளின்
பத்ம விருதை ஏற்க மறுத்த இசைக்கலைஞர்!
நாட்டின் பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைகளைப் படைத்த பிரபலங்களுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது.
இதில் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்…
சொற்களின் வீரியம்!
இன்றைய ‘நச்’!
***
கோபம் சொற்களில் ஏறினால்
வீரியம் ஏறி உச்சம் பெற்று விடுகிறது..
மௌனமானாலோ சறுக்கி விடுகிறது...
27.01.2022 10 : 50 A.M