Browsing Category

திரை விமர்சனம்

வீரபாண்டியபுரம் – தப்பிதமாகிப் போன கணக்கு!

‘சில விஷயங்கள் சரியா அமையாததால படம் சரியா போகலை’ என்பது திரையுலகில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அந்த விஷயங்கள் படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சறுக்கல்களாகவோ, முன் தயாரிப்பில் உருவான தவறுகளாலோ அல்லது பின்பணியில் ஏற்பட்ட அவசரங்களாலோ…

எஃப்.ஐ.ஆர் – தீவிரவாத வேரைக் கண்டறியும் வேட்டை!

பரபரவென்று நகரும் திரைக்கதையோடு ஒரு கமர்ஷியல் படத்தை பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது. இந்த ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் வெளியாகியிருக்கிறது விஷ்ணு விஷால், ரெபா மோனிகா ஜான், கௌதம் வாசுதேவ் மேனன், மாலா பார்வதி, ரைசா வில்சன் உட்படப் பலர்…

மகான் – ‘மகா’ குழப்பமானவன்!

ஒரு மாபெரும் கமர்ஷியல் படைப்பொன்றை எதிர்பார்த்து வரும் ரசிகனுக்கு ஏமாற்றம் தந்தாலும், நல்ல கலைப்படைப்பு காலம் கடந்து திருப்தியளிக்கும். மாறாக, இரண்டையும் கலந்து கட்டுகிறேன் பேர்வழி என்று இறங்கினால் பல நேரங்களில் வெறுமையே எதிர்வினையாகக்…

சில நேரங்களில் சில மனிதர்கள்: குற்றவுணர்வின் கூட்டு முகம்!

ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கைச் சூழல், பிரச்சனைகளை ஒன்று சேர்த்து தீர்வு சொல்லும் திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகமாகி வருகின்றன. அந்த வகையில், ஒருவரது மரணத்தை அடிப்படையாகக் கொண்டு கிளைகள்…

பீமண்ட வழி: தடைகள் தாண்டி தீர்வு தேடும் பயணம்!

சில திரைப்படங்களை மிகத்தாமதமாகப் பார்க்க நேர்கையில், ‘அடடா இதை தியேட்டர்ல பார்த்திருக்கலாமே’ என்று தோன்றும். அந்த வகையில் அமைந்திருக்கிறது ‘பீமண்ட வழி’. ஒரு நீண்ட காலப் பிரச்சனை, அதற்கான தீர்வு, அதை நோக்கிச் செல்லும் முயற்சி, அந்த…

சியாம் சிங்கராய்: அழுத்தமான கருத்தை உரத்துப் பேசும் படம்!

நீங்கள் இங்கு வாசிக்கப்போவது திரைப்பட விமர்சனம் அல்ல‌‌. ஒரு திரைப்படத்தில் அதற்கான‌ சகல ஆடல், பாடல், சண்டைக்காட்சிகளுடன், முற்போக்கான‌ கருத்துக்களையும் விதைக்க முடியும் என்பதற்கான‌ சாட்சி இத்திரைப்படம். வழக்கமான தெலுங்கு மசாலாப் படங்களைப்…

கடந்த காலத் தவற்றைச் சரிசெய்யும் அமானுஷ்யம்!

பயமும் பதற்றமும் ஒன்றுசேரும் எதிர்காலமே இல்லாத சூழல் உருவாகலாம்; அதுவே கடந்த காலத் தவறுகளையும் புரிதலின்மையையும் சரி செய்யக்கூடும் என்று சொல்கிறது மலையாளத் திரைப்படமான ‘பூத காலம்’. நமது அன்புக்குரியவர்களே நம்மை நம்பாமல்போனால் என்னவாகும்…

‘முதல் நீ முடிவும் நீ’ – பால்யத்தின் மலர்ச்சி!

பதின்பருவத்தில் தோன்றும் காதல், காமம் இன்ன பிற களவுகள் பற்றிப் பேசிய படங்கள் சொற்பம். பாலியல் சார்ந்த உணர்வுகள் மட்டுமே பிரதானப்படுத்தப்படும் களத்தில் வெறுமனே நட்பையும் காதலையும் பேசிய திரைப்படங்கள் அதைவிடக் குறைவு. அப்படியொரு படைப்பாக…

சம்பூர்ண ராமாயணம்: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!

தேரோடும்போது சக்கரத்தின் அடியில் சிறிய சாய்வான கட்டையொன்றை வைத்தால் போதும், தேரின் திசை திரும்பிவிடும். அதைப் போலவே, 1960-களில் தமிழ் சினிமாவின் போக்கை புராணங்களின் பக்கம் திருப்பிய பெருமை ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்துக்கு உண்டு.…

கார்பன்: கனவை நகலெடுப்பவனின் பாசப் போராட்டம்!

வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மூலமாகச் சில படங்கள் கவனம் பெறும். சில நேரங்களில் நல்ல முயற்சி என்றளவிலேயே அப்படிப்பட்ட உழைப்பு தங்கிவிடும். இவ்விரண்டுக்கும் இடையே ஓரிடத்தைப் பிடித்திருக்கிறது விதார்த் நடிப்பில் வெளியாகியிருக்கும்…