Browsing Category
திரை விமர்சனம்
வாரிசு – குடும்பம் ஒரு கதம்பம்!
நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வரும். ஆனாலும், அவர் அதிகமாக ‘பேமிலி எண்டர்டெயினர்’ கதைகளில் நடிக்கவில்லை.
என்றென்றும் காதல் தொடங்கி பிரியமானவளே, ப்ரெண்ட்ஸ், வசீகரா, சச்சின், காவலன் என்று அவர்…
V3 – விபரீதம் விளக்கம் விஷம்!
நல்ல நோக்கங்களோடு மேற்கொள்ளப்படும் காரியங்கள், அடிப்படை அம்சங்களைத் தகர்க்கும் வகையில் இருந்தால் நன்றாகவா இருக்கும். பொதுவெளியில் நிகழும் சில விஷயங்கள் இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
சிறப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள்…
ராங்கி – நெஞ்சுரம் கொண்ட பெண்!
ஒரு ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆணைப் பிடிக்கும்? அந்த உறவுக்குப் பெயர் காதலா அல்லது அதையும் தாண்டிய ஏதாவது ஒன்று இருக்கிறதா? இப்படி யோசிக்கத் தொடங்கினால், அதற்கு முடிவே கிடையாது.
அப்படியொரு…
உடன்பால் – கனவை நசுக்கும் நனவு!
சந்தியா ராகம், வீடு போன்ற படங்கள் இப்போது ரசிக்கப்படுமா? அவை போன்று எளிய பொருட்செலவில் தயாரான, அதேநேரத்தில் கனம் நிறைந்த கதை சொல்லல் கொண்ட படங்கள் வெகு அபூர்வம்.
மிக அரிதாக நிகழ்கிற அந்த அற்புதத்தை மீண்டுமொரு முறை காண வைத்திருக்கிறது…
‘செம்பி’ – பெண் போற்றுதலுக்கான பிரச்சாரம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம்.
அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய…
டிரைவர் ஜமுனா – ‘த்ரில்’ ஊட்டும் சாகசக்காரி!
நாயகன் மட்டுமல்ல, நாயகியாலும் ஒரு திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பை அதிகப்படுத்த முடியும்.
முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையில் நடித்து, அப்படைப்பை வெற்றி பெற வைக்க முடியும். சமகாலத்தில் அப்படியொரு நாயகியாகத் திகழ்பவர் தான் ஐஸ்வர்யா…
காபா – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!
மலையாளத்தில் வெளியாகும் கமர்ஷியல் படங்களைப் பார்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம். சில நேரங்களில் பார்க்கும்படியாகவும் அருமையாகவும் இருக்கும்; சில நேரங்களில் சகிக்க முடியாதவாறு இருக்கும்.
ஆழமான கதையம்சம் கொண்ட, பரீட்சார்த்த முயற்சியிலமைந்த…
‘லத்தி’ – அடி பின்னிட்டாங்க!
விஷால் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். சண்டக்கோழி முதல் வீரமே வாகை சூடவா வரை அவரது படங்களில் பெரும்பாலானவற்றின் அடிநாதம் ஒரேமாதிரியானதாகத்தான் இருக்கும்.
அதாகப்பட்டது, விஷால் நடிக்கும்…
கனெக்ட் – கொஞ்சம் பலவீனமான பிணைப்பு!
மிகக்குறைவான பாத்திரங்கள் கொண்ட கதைகள் திரைப்படமாகும்போது, திரைக்கதையைச் செப்பனிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். சின்னச் சின்ன தவறுகள் கூட, சில நேரங்களில் பெருங்கப்பலில் விழுந்து பொத்தலாக மாறிவிடும்.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா,…
‘அவதார் 2’ – பிரபஞ்சம் எங்கும் உணர்வெழுச்சி!
ஒரு படம் உலகம் முழுக்க ஒரேமாதிரியான உணர்வலைகளை எழுப்ப முடியுமா? நிச்சயமாக அது சாத்தியமில்லை.
ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் தவழும் சிந்தனைகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் படிந்திருக்கும் எண்ணவோட்டங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.…